தடுப்பூசி செலுத்த போகும் கர்ப்பிணிகளே, இதை தெரிஞ்சுக்கோங்க!!

தடுப்பூசி செலுத்த போகும் கர்ப்பிணிகளே, இதை தெரிஞ்சுக்கோங்க!!

தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், கோவின் அல்லது தடுப்பூசி மையத்தில் கண்டிப்பாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு பெரும்பாலும் தொற்று அறிகுறிகள் தென்படாது என்பதால், அவர்கள் விழிப்புடன் தொற்று கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் போன்ற பாதிப்பு உள்ள 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொற்றிலிருந்து கவனமாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட கர்ப்பிணிப் பெண்களும் உரிய இடைவெளிக்கு பின் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திய 20 நாட்களுக்கு பின் மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, அடிவயிற்று வலி, தடுப்பூசி செலுத்திய இடத்தில் இரத்த கட்டு, வாந்தி, தலைவலி, கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவர்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com