கொள்ளையடிக்கும் ஆட்சி தான் திமுக,.. இது தான் விடியலா?.கொந்தளிக்கும் எச்.ராஜா.! 

கொள்ளையடிக்கும் ஆட்சி தான் திமுக,.. இது தான் விடியலா?.கொந்தளிக்கும் எச்.ராஜா.! 

நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அதன் பின் திமுக ஆட்சிப்பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் சிமெண்ட் விலை உயர்வு திமுக ஆட்சிக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. மேலும் எதிர்க்கட்சிகளும் இதை மையமாக வைத்து திமுகவை விமர்சித்து வருகிறார்கள். 

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சிமெண்ட் விலையை வைத்து அவரை விமர்சித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் "மே 2 அன்று சிமெண்ட் 1 மூட்டை 380. இன்று 520 திமுக என்றாலே சிமெண்ட் கார்ட்டல் கூட்டுக் கொள்ளை என்பது நிருபணம்.  30 நாட்களில் மூட்டைக்கு 140 ரூபாய் விலையேற்றம். ஆனால் இதுதான் விடியலா என்று ஊடகங்கள் ஏன் விவாதிக்கவில்லை. மக்களை கொள்ளையடிக்கும் ஆட்சிக்கு துதிபாடுவதுதான் ஊடக தர்மமா?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

அவரின் இந்த பதிவுக்கு பெட்ரோல் விலை ஏறும் போது அணைத்து விலைகளும் ஏறும்,இது தெரியாதா என நெட்டிசன்கள் எச்.ராஜாவுக்கு பதில் கூறி வருகிறார்கள்.