ஆபத்தான நிலையில் திமுக எம். பி ஆ.ராசாவின் மனைவியின் உடல்நிலை.! 

ஆபத்தான நிலையில் திமுக எம். பி ஆ.ராசாவின் மனைவியின் உடல்நிலை.! 
Published on: 
Updated on: 
1 min read

திமுக எம். பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி. இவர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் 6 மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியை உடல்நிலை காரணமாக ஆ. ராசா கடந்த கடந்த சில நாட்களாக அங்கு தங்கி மனைவியை கவனித்து வருகிறார்.
 

இந்நிலையில், கொரோனா ஆய்வு பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மகள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு சென்று அங்கு ஆ.ராசாவை சந்தித்து சிகிச்சை பெற்றுவரும் அவரது மனைவியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில் தற்போது சிகிச்சை பலன் இன்றி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com