மருத்துவத்துறைக்கு சுகாதாரத்துறை சுற்றறிக்கை...!

Published on
Updated on
1 min read

மிக்ஜாம் புயலை முன்னிட்டு, புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் மருத்துவத்துறை முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் மருத்துவத்துறை முன்னெச்சரிக்கையாக இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் செல்போன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஜெனரேட்டர்கள், மின்சார பேட்டரிகள் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில், அவசர கால தேவைக்கான மருந்துகள் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ளவும், மேடான பகுதிகளுக்கு எளிதில் எடுத்துச் செல்லும் வகையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவமனை வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

24 மணி நேரமும் அவசர கால மருத்துவக் குழு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ள சுகாதாரதுறை, புயலுக்குப் பின்னும் தொற்றுநோய் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, பரிசோதனைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com