வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் மாலை 3 மணியளவில் மழை கொட்டித்தீர்தது. நுங்கம்பாகம், கோடம்பாக்கம், திருவல்லிகேணி, மெரினா,இராயப்பேட்டை,நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டிதீர்த்து.
மேலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி ஆகிய கன மழையும், வேலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கட மழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய்யம் தெரிவித்துள்ளது.