8 மாவட்டங்களுக்கு மட்டும் தான் கனமழைக்கு வாய்ப்பாம்.. இந்த மாவட்டத்தில் நீங்க இருக்கீங்களானு பாத்துக்கோங்க!!

8 மாவட்டங்களுக்கு மட்டும் தான் கனமழைக்கு வாய்ப்பாம்.. இந்த மாவட்டத்தில் நீங்க இருக்கீங்களானு பாத்துக்கோங்க!!
Published on
Updated on
1 min read

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி,  திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் நாளை மற்றும் மறுநாள் வடதமிழக மாவட்டங்கள், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், கேரள -  கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com