"வன திருத்த மசோதா, மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை" உயர்நீதிமன்றம்!

"வன திருத்த மசோதா, மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை" உயர்நீதிமன்றம்!

வனத் திருத்த மசோதா தொடர்பான பரிந்துரையை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்ப முடியும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் சார்பில் வன(பாதுகாப்பு) திருத்த மசோதா 2023 முன்மொழியப் பட்டுள்ளது. இதற்கான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் தீரன் திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,   வன(பாதுகாப்பு) திருத்த மசோதா விற்கான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தெரியாதவர்கள் தங்களின் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, திருத்த மசோதாவை தமிழ் மொழியில் வெளியிடுமாறும், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை தமிழில் அனுப்ப அனுமதிக்குமாறும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு பரிந்துரையை இந்தி அல்லது ஆங்கிலத்தில் அனுப்பும் மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கவும்  உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com