ஆண்டுக்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ள வேறு எங்கும் சொத்து இல்லாதவர்களுக்கு வீடு என அமைச்சர் தகவல்!

ஆண்டுக்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ள வேறு எங்கும் சொத்து இல்லாதவர்களுக்கு வீடு என அமைச்சர் தகவல்!

அய்யனடைப்பு பகுதியில் ரூ.20.59 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானப் பணியினை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் பார்வைியிட்டு ஆய்வு செய்தார்.!

அனைவருக்கும் வீடு திட்டம்

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடார சட்டமன்றதிற்குட்பட்ட அய்யனடைப்பு பகுதியில், பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இக்குடியிருப்பு பகுதியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பரசன் கூறுகையில், தூத்துக்குடி, ஒட்டப்பிடார சட்டமன்றம் அய்யனடைப்பு பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.

பகுதி 1,2,என பிளாக் கட்டப்பட்டு 220 வீடுகள் வீதம் 20கோடியே 59 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளானது, 40சதவிகிதம் முடிவு பெற்றுள்ளது. இன்னும் 6 மாத காலத்தில் முழுமையாக பணி நிறைவு பெற்று, இப்பகுதி மக்களுக்கு அரசு மூலம் வீடுகள் ஒப்படைக்கப்படும். 1வது பகுதி பிளாக் 11கோடியே 36 லட்சம் 2வது பகுதி 9கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நிலையில், 1வது திட்ட பகுதி பிளாக் 1லட்சத்து 6ஆயிரம், 2வது திட்ட பகுதி பிளாக் 1லட்சம் ரூபாய்  பயனாளிகள் கட்ட வேண்டும்.

தாமதம் ஏற்பட்டால் அபராதம்

ஆண்டுக்கு 3லட்சம் வருமானத்திற்கு கீழ் உள்ள வேறு எங்கும் சொத்து இல்லாத பயனாளிகளுக்கு வழங்கப்படும். கொரோனா காலகட்டம் என்பதால் இப்பணிகள் முடிவடைய காலதாமதம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவுப்படி, பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். கடந்த ஆட்சியில் பல கிலோ மீட்டர் தூரம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. இதனால் தூரம் மிகுதியால் மக்கள் அங்கு வர யோசனை செய்த நிலையில் கிட்டத்தட்ட, 18 ஆயிரம் வீடுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்கு அரசு சார்பில் ஆட்கள் தேர்வு செய்து வருகிறோம் என கூறிய அவர், கட்டடம் கட்ட கால தாமதம் ஏற்படும் நிலையில், ஒப்பந்ததார்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கூறினார்.