நிதானம் தவறி பேசுபவர்களுக்கு...பதிலளிக்க விரும்பவில்லை...டிடிவி அதிரடி!

நிதானம் தவறி பேசுபவர்களுக்கு...பதிலளிக்க விரும்பவில்லை...டிடிவி அதிரடி!

நிதானம் தவறி பேசுபவர்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என செய்தியாளர்கள் பேட்டியில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அம்மா பேரவை மாநில நிர்வாகிகள் மற்றும்  மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமமுகவின் பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணி மற்றும் பாராளுமன்ற தேர்தல் நோக்கிய செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.

பதிலளிக்க விரும்பவில்லை:

அப்போது அதிமுக தலைவர்கள் தொடர்ச்சியாக உங்களை விமர்சிக்க கூடிய நிலையில் இருப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிவி, அரசியல் ரீதியாக ஒருவரை விமர்சனம் செய்வதை தாண்டி, நிதானம் தவறி பேசுபவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. அம்மாவின் கொள்கையை பின்பற்றுவது தான் எங்கள் நோக்கம் என்றார்.

நியாயமான கோரிக்கை:

தொடர்ந்து பேசிய அவர், எங்கள் பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும், அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்களுடன் வாருங்கள் என்கிறேன். இரட்டை இலையும் கட்சியும் இருப்பதால் தான் தொண்டர்கள் இருக்கிறார்கள்.  அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும் என்ற நியாயமான எனது கோரிக்கையை ஏற்பதும், மறுப்பதும் அவர்கள் எண்ணம் என்று ஈபிஎஸை டிடிவி தினகரன் சாடி பேசினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com