தமிழகத்தையே தனது சொந்த மண்ணாக நினைக்கிறேன்- ஓய்வு  பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

ஒடிசா மாநிலத்தில் பிறந்த தனக்கு வாழ்வளித்த தமிழகத்தையே தனது சொந்த மண்ணாக நினைக்கிறேன் என்று ஓய்வு  பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கமுடன் தெரிவித்தார்.
தமிழகத்தையே தனது சொந்த மண்ணாக நினைக்கிறேன்- ஓய்வு  பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்
Published on
Updated on
1 min read

ஒடிசா மாநிலத்தில் பிறந்த தனக்கு வாழ்வளித்த தமிழகத்தையே தனது சொந்த மண்ணாக நினைக்கிறேன் என்று ஓய்வு  பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கமுடன் தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தின் 29 வது டி.ஜி.பி-யாக பதவியேற்ற ஜே.கே திரிபாதி தனது 2 ஆண்டு பதவிக்காலத்தை சிறப்பாக முடித்து இன்றுடன் ஓய்வு பெற்றார். தமிழகத்தின் 30 வது டி.ஜி.பி-யாகப்  பொறுப்பேற்ற சைலேந்திரபாபுவை பதவியில் அமர்த்தி  காவல் துறையிலிருந்து பிரியா விடை பெற்றார் ஜே.கே திரிபாதி. 

ஆங்கிலேயர் காலத்து முறையான Police Pulling எனப்படும் வடம் கட்டப்பட்ட காரில் அவரையும் அவரது மனைவியையும் அமர்த்தி காவல்துறை உயர் அதிகாரிகள்  இழுத்துச் சென்று மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி  திரிபாதி-க்கு பிரிவு உபசார விழா  கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுக் குழுவினரின் பேண்டு வாத்தியங்கள் முழங்க சிறப்புக் காவல் படையினர், சிறப்பு கமாண்டோ படையினர், கடலோரப் காவல்படை, ஆயுதப்படை வீரர்கள், குதிரைப்படை வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை திறந்த வாகனத்தில்ச் சென்று திரிபாதி ஏற்றுக்கொண்டார்.

இந்த விழாவில்  பேசிய திரிபாதி, ஒடிசா மாநிலத்தில் பிறந்த தனக்கு வாழ்வளித்த தமிழகத்தையே தனது சொந்த மண்ணாக நினைக்கிறேன் என்று  உருக்கமுடன் தெரிவித்தார். பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தமிழக மக்களுக்கான தனது சேவை தொடரும்  என்றும்  அவர் கூறினார்.

முன்னதாக  பேசிய  புதிய டிஜிபி சைலேந்திரபாபு,  தமது பணியை திறம்பட செய்யக்கூடியவர்  திரிபாதி என்றார். கடும் உழைப்பாளி என்றும் சிறந்த மனிதர் என்றும் திரிபாதிக்கு சைலேந்திரபாபு புகழாரம் சூட்டினார். பிரிவு உபசார விழாவில்  டி.ஜி.பி சைலேந்திரபாபு, அவரது மனைவி சோஃபியா, கூடுதல் டி.ஜி.பி-க்கள் கரண் சின்ஹா, ஷக்கீல் அக்தர், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் பங்கேற்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com