திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துறையூர் ஆத்தூர் சாலையில் அரை அடி முதல் 9 அடி வரை பலவிதமான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு, அவற்றிற்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் விநாயகர் பல உருவங்களில் வல்லப விநாயகர், ராஜகணபதி, வெற்றி கணபதி, வீரகணபதி உள்ளிட்ட பல்வேறு வகையான விநாயகர் சிற்பங்கள் செய்யப்பட்டு அவற்றிற்கு வர்ணங்கள் பூசும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவற்றை நகரில் உள்ள இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். 150 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் வரையிலான விநாயகர் சிற்பங்கள் விலைக்கு வைக்கப்பட்டுள்ளன.