அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் 2 கோடியே 17 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரத்து 500 மற்றும் 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கி இருப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வெள்ளாங்காட்டு பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலை கடையை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சிரைப்புரை ஆற்றியபோது:-
அதிமுக ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முழு நேரம் சிகிச்சை அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளபட்டது எனவும், தற்போது 4 மணி நேரம் தான் மருத்துவர்கள் இருக்கும் நிலை உள்ளது,
முழு நேர மருத்துவர்கள் வேண்டும். ர்ன்ச்வும் குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2100 இடங்களில் அம்மா கிளினிக்கை கொண்டுவந்தார். இது அனைத்து பகுதிகளிலும் இன்று மூடப்பட்டுள்ளது. இல்லம் தேடி மருத்துவத்தில் மக்கள் கேட்கின்ற மருந்துகளை மட்டுமே தருவார்களே தவிர உடலில் என்ன குறை இருக்கின்றது என்பதை ஆராய முடியாது.
ஒரு மருத்துவர்,ஒரு செவிலியர் மற்றும் அதற்கான பணியாளர்கள் இருக்கின்ற போது தான் உடலில் உள்ள நோய்களை கண்டறிந்து அதற்கு எந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் என்று சிகிச்சை அளிக்க முடியும் எனக் கூறினார்.
அதோடு, மருத்துவர்கள் இல்லாமல் மக்கள் மருந்துகளை வாங்கும் போது, அது தேவைக்கு அதிகமாக இருக்கலாம் அல்லது கூடுதலாக மருந்துகள் தேவைப்படலாம், எந்த நோய்க்கு எந்த மருந்துகளை கொடுக்க வேண்டும் என்பதை பணியாளர்களால் பரிசோதித்து வழங்க முடியாத நிலை உள்ளது”, எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு திட்டம் கொண்டு வரும் போது அதில் நன்மை இருக்கின்றதா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகை 1000 பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்படாதவர்கள் வருத்தத்தோடு இருக்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் 2 கோடியே 17 லட்சம் பேருக்கு மாதம் 1500 மற்றும் 6 சிலிண்டர்கள் இலவசமாக நிச்சயமாக வழங்கி இருப்போம்”, என தெரிவித்தார்.
“கர்நாடக தேர்தலில் 2000 ரூபாய் கொடுப்பேன் என்று சொல்லிய வாக்குறுதியை இரண்டே மாதங்களில் நிறைவேற்றப்பட்டது,ஆனால் திமுக இரண்டு ஆண்டு காலம் முடிந்து, தேர்தல் வரவிருப்பதால் கருணை உள்ளத்தோடு முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை 1000 வழங்கி உள்ளார்”, என சாடினார்.
இதையும் படிக்க | 2023-24 ஆண்டில் ரூ.1,027 கோடி வரி வசூல்..! சென்னை மாநகராட்சி தகவல்