இன்று முதல் அனைத்து கடைகளும் இயங்கலாம்... ஆனால் ஊரடங்கு ஒருவாரம் நீட்டிப்பு!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று  முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகிறது.

இன்று முதல் அனைத்து கடைகளும் இயங்கலாம்... ஆனால் ஊரடங்கு ஒருவாரம் நீட்டிப்பு!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று  முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகிறது.


தமிழ்நாட்டில் ஏற்கனவே மளிகை கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் இன்று  முதல் கூடுதல் தளர்வுகளுடன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அழகு நிலையங்கள், சலூன் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கலாம்., மிக்சி, கிரைண்டர், போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் மற்றும் அதனை பழுது நீக்கும் கடைகள் நேரக் கட்டுப்பாட்டுடன் இன்று  முதல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம். மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி  அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளை இன்று  முதல் தொடரலாம் என்றும்., இருசக்கர வாகனங்களில் இன்று முதல் பணிக்கு செல்வோர் இ-பதிவு மற்றும் நிறுவன அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஐ.டி. நிறுவனங்கள் 20 சதவீதம் ஊழியர்களை கொண்டு இயங்கலாம். வங்கிசாரா நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும், பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல்  9 மணி வரை பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள அனுமதியளிக்கபபட்டுள்ளது. தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் செயல்படவும் அனுமதிக்கப்படுகிறது.

பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, தற்போது இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி அளிக்கப்படுள்ளது. இதேபோல், தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்து வருவதால், ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.