ஒரு மெஷினில்-45% ஆல்கஹால்; மற்றொரு மெஷினில் - 0!!! இது எப்படி சாத்தியமாகும்?

ஒரு மெஷினில்-45% ஆல்கஹால்; மற்றொரு மெஷினில் - 0!!!  இது எப்படி சாத்தியமாகும்?

மதுபழக்கம் இல்லாத நபரை மது குடித்தாக வழக்கு பதிவு

மதுபழக்கம் இல்லாத நபரை மது குடித்தாக வழக்கு பதிவு செய்த போலீசார்...பழுதான ப்ரித் அனாலைசர் இயந்திரத்தை வைத்து குடிப்பழக்கம் இல்லாதவர் மீது வழக்குபதிவு செய்ய போராடிய போலீசார் ... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு. சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டை பகுதிக்கு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலை வழியாக சாலிகிராமம் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். 

மேலும் படிக்க | ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு : இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கருத்து

45 சதவிகிதம் ஆல்கஹால்

அப்போது அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை சட்ட ஒழுங்கு இளங்கோவன் உள்ளிட்ட காவலர்கள்  தீபக்கின் வாகனத்தை மடக்கியுள்ளனர். அவர் மது அருந்தியுள்ளாரா என ப்ரித் அன்லைசர் இயந்திரத்தைக் கொண்டு சோதனை செய்தனர். அப்போது தீபக் மது அருந்தியிருப்பதாகவும், தீபக்கின் உடலில் 45 சதவிகிதம் ஆல்கஹால் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். குடிப்பழக்கமே இல்லாத தீபக் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் தனக்கு குடிப்பழக்கம் இல்லை எனவும், உங்களுடைய இயந்திரம் கோளாறாக உள்ளது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது குடித்து வாகனம் ஓட்டுவது தொடர்பாக ரசீதில் கையெழுத்திடுங்கள் என போலீசார் வற்புறுத்தியுள்ளனர். 

மேலும் படிக்க | அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஈபிஎஸ் போட்ட முதல் கையெழுத்து

தொடர்ந்து தீபக் தான் குடிக்கவில்லை என வாக்குவாதம் செய்ததால் போலீசார் வாகனத்தில் இருந்த மற்றொரு இயந்திரத்தை எடுத்து 2 முறை சோதனை செய்தபோது 2 முறையும் தீபக் மது அருந்தவில்லை, அவருடைய உடலில் 0 அளவு ஆல்கஹால் இருப்பதாக வந்துள்ளது. அதன்பிறகு தீபக்கை போலீசார் விடுவித்துள்ளனர். பழுதான இயந்திரத்தை வைத்து சோதனை செய்து பொய் வழக்கு போடும் பணியில் ஈடுபடுவது குறித்தும்,  குடிப்பழக்கம் இல்லாத தீபக்கிடம் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதை ஒப்பு கொள்ளுங்கள் என போலீசார் வற்புறுத்தும் வகையிலான வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் கபில் குமார் சராட்கர் இதுவரை இது போன்று நிகழ்வு நடந்ததில்லை சென்னை காவல்துறையில் இது 320 ப்ரித் அனலைசர் இயந்திரங்கள் உள்ளது. அதில் இது போன்று பிரச்சினைகள் இருந்ததில்லை எனினும் இது குறித்து விசாரணை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.