எப்புட்றா.....? அடிக்காமலேயே அடிபம்புல தண்ணீர் வருது...!

எப்புட்றா.....? அடிக்காமலேயே அடிபம்புல தண்ணீர் வருது...!

நாகை: நாகப்பட்டினத்தில் உள்ள கிராமத்தில், அடிபம்பு ஒன்றில், அடிக்காமலேயே தண்ணீர் வரும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

நாகை மாவட்டம் சடையப்பர் கோவில் தெருவில், பஞ்சாயத்து நிர்வாகத்தால் அமைக்கப்பட்டிருந்த 15 வருடங்கள் பழைமையான அடிபம்பு ஒன்று உள்ளது.

அப்பகுதியில் இருப்போர் அவ்வப்போது அந்த அடிபம்பை உபயோகித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அடிபம்பில் கோளாறு ஏற்பட்டது. இந்த கோளாறின் காரணமாக, அடைப்பம்பினை அடிக்காமலேயே தண்ணீர் வெளிவருவதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். 

தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அடிபம்பிலிருந்து, அடிக்காமலேயே அதிகளவு தண்ணீர் வெளிவந்து வீணாகிக் கொண்டிருப்பதை மக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றாலும், ஒரு புறம் வேதனையும் தெரிவித்து வருகின்றனர்.

அடிபம்பில் ஏற்பட்ட கோலாரை பஞ்சாயத்து நிர்வாகம் சரிசெய்யும்மா என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com