கலைஞர் கோட்டம் திறப்பு விழா; அமைச்சர்கள் ஆய்வு!

கலைஞர் கோட்டம் திறப்பு விழா; அமைச்சர்கள் ஆய்வு!

திருவாரூரில் வரும் 20ஆம் தேதி 'கலைஞர் கோட்டம் திறப்பு விழா -மாநாடு' நடைபெறும் இடத்தினை அமைச்சர்கள் எவ.வேலு,கே என் நேரு டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவாரூரில் பிரம்மாண்டமான கலைஞர் கோட்டம் திறப்பு விழா வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தினை திறந்து வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மாநாட்டுக்காக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை தமிழக அமைச்சர்கள் எவ வேலு, கேஎன் நேரு, டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், தாட்கோ தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com