போக்சோ சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா - பார் அசோசியேஷன் புறக்கணிக்க முடிவு....

போக்சோ சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா - பார் அசோசியேஷன் புறக்கணிக்க முடிவு....


திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நாளை நடைபெறும்  போக்சோ சிறப்பு நீதிமன்ற திறப்பு விழாவை திண்டுக்கல் பார் அசோசியேஷன் புறக்கணிக்க முடிவு


திண்டுக்கல் பார் அசோசியேஷன் மாவட்ட பொதுக்குழு கூட்டம், தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது.  செயலாளர் உதயகுமார், துணைத் தலைவர் குமரேசன், இணைச் செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாளை நடைபெறும் போக்சோ  சிறப்பு நீதிமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து தலைவர் செந்தில்குமார் கூறுகையில்,  

 திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நாளை திறக்கப்பட உள்ள சிறார் பாலியல் வண்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றமான   போக்சோ  நீதிமன்ற திறப்பு விழாவிற்கு தகுதியில்லாத கல்லூரிகளில் படித்து, தங்களை வழக்கறிஞர்களாக காட்டி,  புதிதாக உருவாக்கப்பட்ட  வழக்கறிஞர் சங்கத்திற்கு அழைப்பிதழ்கள் கொடுத்து  விழா நடத்தவிருப்பதை  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் விழாவை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 650 வழக்கறிஞர்கள் நாளை போக்சோ நீதிமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்போம்.

மேலும் போலி வழக்கறிஞர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்.   போலி வக்கீல்கள் குறித்து உயர் நீதிமன்றத்தில் ரிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்காடிகள் போலி வழக்கறிஞர்களை இனம் கண்டு அவர்களை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com