தமிழகத்தில் 30 இடங்களில் கூரியர் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள கூரியர் அலுவலகத்திலலும், ஆழ்வார்பேட்டை கவிஞர் பாரதிதாசன் சாலையில் உள்ள புரோபசனல் கூரியர் நிறுவனத்தின் கார்ப்ரேட் அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது. வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்போடு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.