வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மண்பானை விற்பனை சூடுபிடித்துள்ளது.
கோடை காலம் ஆரம்பித்தாலே போதும் அனைவரும் குளிர்ச்சியான நீரை நோக்கி தான் மக்கள் படையெடுப்பார்கள். அதிலும் வசதியானவர்கள் வீட்டில் குளிர்சாதனப்பெட்டி இருப்பதால் நீரை அதற்குள் பிடித்து வைத்து அந்த நீரை பருகுவார்கள். ஆனால், வசதி இல்லாதவர்கள் மண்பானையையே குளிர்சாதனப்பெட்டியாக உபயோகிப்படுத்தி வருகிறார்கள். அதுவே ஆரோக்கியமானதும் கூட என்பதால் வசதி படைத்தவர்கள் கூட வெயில் காலங்களில் மண்பானையை நோக்கி படையெடுப்பார்கள்.
இதையும் படிக்க : உணவு தட்டுடன் போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்...!
அந்த வகையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மண்பானை விற்பனை சூடுபிடித்துள்ளது. கோடையின் தாக்கத்தை குறைக்கும் வகையில் இயற்கையான முறையில் குளிர்ச்சியான குடிநீரை பருகும் வகையில் மண் பானைகள், கூஜா என பல்வேறு வடிவங்களினால் ஆன மண் பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. 10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பானைகள், 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மண்பானைகளை மக்கள் ஆரவாரத்துடன் வந்து வாங்கி செல்கின்றனர்.