தமிழக காவல்துறையில் 49 ஐபி எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்தும் பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து ஐ.ஏ.எஸ்,ஐபி எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது 49 ஐபி எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் அமலாக்கத்துறை ஐஜியாக இருந்த செந்தாமரை கண்ணன் திருநெல்வேலி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரயில்வே ஐஜியாக இருந்த வனிதா திருப்பூர் காவல் ஆணையராக பணியிட மாற்றம்,திருப்பூர் காவல் ஆணையராக கார்த்திகேயன் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும்,தலைமையிட ஐஜியாக இருந்த ஜோஷி நிர்மல் குமார் சிபிசிஐடி ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி ஐஜியாக இருந்த தேன்மொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல நஜ்மல் ஹூடாவை சேலம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தொழிற்நுட்ப பிரிவு டிஐஜியாக இருந்து வந்த ராஜேந்திரன் சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராகவும்,கோவை சரக டிஐஜியாக இருந்து வந்த நரேந்திர நாயர் சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டிஐஜியாக இருந்து வந்த லலிதா லஷ்மி சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராகவும், திருப்பூர் எஸ்.பியாக இருந்து வந்த தீஷா மிட்டல் மயிலாப்பூர் துணை ஆணையராகவும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.அமலாக்கத்துறை எஸ்.பியாக இருந்த குமார் சென்னை போக்குவரத்து
தெற்கு மண்டல துணை ஆணையராகவும்,சேலம் எஸ்.பியாக இருந்து வந்த தீபா கனிகர் அண்ணா நகர் துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை எஸ்.பியாக இருந்த பாலாஜி சரவணன் சென்னை தலைமையக துணை ஆணையராகவும், எஸ்.பி மகேந்திரன் நிர்வாகத் துறை துணை ஆணையராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்காக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன் குமார் அபினபு மீண்டும் அதே பதவியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். தலைமையக டிஐஜியாக இருந்து வந்த மகேஷ்வரி சேலம் சரக டிஐஜியாக பணியிட மாற்றப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டி ஐஜியாக இருந்த ராதிகா திருச்சி சரக டிஐஜியாகவும்,வேலூர் சரக டிஐஜியாக இருந்த காமினி மதுரை சரக டிஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் சரக டிஐஜியாக இருந்து வந்த ரூபேஷ் குமார் மீனா சென்னை சிபிசிஐடி ஐஜியாகவும்,திருச்சி சரக டி ஐஜியாக இருந்து வந்த ஆனி விஜயா சென்னை நிர்வாகத்துறை டி ஐஜியாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் சரக டிஐஜியாக இருந்த சாமூண்டீஸ்வரி சென்னை தலைமையக இணை ஆணையராகவும்,திண்டுக்கல் சரக டிஐஜியாக இருந்து வந்த முத்துசாமி கோவை சரக டிஐஜியாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.