'அடேங்கப்பா' வெறும் 13 மணி நேரம்.. 30 மீட்டர் அகலம் கொண்ட பாலம்.. கட்டி சாதனை படைத்த ரயில்வே கட்டுமானப்பிரிவினர்!!

விருத்தாசலம் அருகே 13 மணிநேரத்தில் 30 மீட்டர் அகலம் கொண்ட ரயில்வே தரைமட்டப்பாலம் அமைத்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே கட்டுமானப்பிரிவினர் சாதனை படைத்துள்ளனர்.

'அடேங்கப்பா' வெறும் 13 மணி நேரம்.. 30 மீட்டர் அகலம் கொண்ட பாலம்.. கட்டி சாதனை படைத்த ரயில்வே கட்டுமானப்பிரிவினர்!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் - திருச்சி மின்சார இருவழி ரயில்பாதை மார்க்கத்தில் தாழநல்லூர், சாத்துக்கூடல், விருத்தாசலம் ஆகிய பகுதிகள் வழியாக செல்லும் ரயில்பாதையில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

அந்த வகையில் விருத்தாசலம் ஜங்கஷனில் இருந்து தாழநல்லூர் இடையேயான 3 பாலங்கள் அமைக்கும் பணி 6 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 9-ம்  தேதி முதல் சுமார் 200க்கும் அதிகமான கட்டுமான ஊழியர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் 13 மணி நேரம் 30 நிமிடத்தில் சுமார் 30 மீட்டர் அகலத்தில் 4 மீட்டர் உயரம் கொண்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.