சென்னையில் பிரபல திரையரங்கில் திடீர் ஐ.டி சோதனை...!

சென்னையில் பிரபல திரையரங்கில் திடீர் ஐ.டி சோதனை...!

சென்னையில் பிரபல திரையரங்கில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள பிரபல ரோகிணி திரையரங்கில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது ரோகினி திரையரங்கம் சார்பில் வாங்கப்பட்ட பொருட்களுக்கு உரிய வரி செலுத்தாமல் முறைகேடாக வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக இந்த சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள் குறித்தும் திரையரங்க நிர்வாக சார்பில் வாங்கப்பட்ட பொருட்கள் குறித்தும் முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டதாக சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோகிணி திரையரங்கம் மட்டுமின்றி சென்னையில் மேலும் சில இடத்தில் சரக்கு மற்றும் சேவை வரி துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com