ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது 23 மாதங்கள் ஆட்சி செய்த தி.மு.க விற்கு மக்கள் கொடுத்த வெகுமதி அல்ல என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி என்பது 23 மாதங்கள் ஆட்சி செய்த திமுகவிற்கு மக்கள் கொடுத்த வெகுமதி அல்ல என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவை இணைப்பது எங்கள் வேலை அல்ல என்றும், ஒரு கட்சி இன்னொரு கட்சியை வழிநடத்துவது ஜனநாயகமாக இருக்காது என்றும் கூறினார். மேலும் நான் பா.ஜ.க வின் தலைவராக இருக்கும் வரை மற்ற கட்சியின் பிரச்னையில் தலையிட மாட்டேன் என்பதில் தெளிவாக இருப்பதாகவும், அ.தி.மு.க வில் பிரிந்திருப்பவர்களை இணைப்பது தங்கள் வேலை அல்ல என்றும் அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார்.