சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர் வைத்தது பெருமையாக இருப்பதாகவும் அவ்வாறு பெயர் வைத்த ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நன்றியையும் தெரிவித்தார்.
மேலும் சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் எனவும், அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதை தாங்கள் ஏற்றுக்கொள்வோம் எனவும் ராமச்சந்திரன் கூறினார்.