கரூரில், 8-வது நாளாக ஐ.டி. ரெய்டு!

கரூரில்,  8-வது நாளாக ஐ.டி. ரெய்டு!
Published on
Updated on
1 min read

கரூரில் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீட்டில் 8-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 8-வது நாளாக வருமான வரி சோதனை இன்று நடைபெற்று வருகிறது. இதில் கரூர் லாரிமேடு பகுதியில் உள்ள வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் நேற்று தொடங்கிய சோதனை, விடிய விடிய நடைபெற்றது. இதற்காக சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின் முடிவில் 2 பெட்டிகளை அதிகாரிகள் காரில் எடுத்து சென்றனர். 

இதேபோன்ற, கரூர் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் உணவகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றிவிட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதிகாலை 4 மணிவரை சோதனை நடைபெற்ற நிலையில், மெஸ்சிற்கு மீண்டும் சீல் வைத்து, அப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com