கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலை மேம்படுத்தப்படுமா? பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு!

கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலை மேம்படுத்தப்படுமா? பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு!

கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். 


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் வினாக்கள்- விடை நேரத்துடன் தொடங்கியது. அப்போது, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், திருவண்ணாமலை கோயிலுக்கு பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் அதிக அளிவில் வருவதால், திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலையை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மத்திய அரசு அனுமதி அளித்தால் முதலமைச்சர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலை நான்கு வழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com