அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு ஜெயக்குமார் கண்டனம்!

காவிரி விவகாரத்தில் துரைமுருகனின் பேச்சு மழுப்பலாகவும் நழுவலாகவும் கோழையை போல் உள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கட்சியின் சார்பில்  பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதிமுக பாஜக குறித்து பேசிய ஓபிஎஸ் மற்றும் பண்ரூட்டி ராமச்சந்திரன் குறித்த கேள்விக்கு, ஆஸ்கார் நாயகனை வைத்து கொண்டு பத்து கட்சி தாவிய பண்ரூட்டி பேசியிருக்கிறார். அதை ஆஸ்கார் நாயகன் ஓபிஎஸ் அமைதியாக பார்த்து கொணருந்தார். இத்தகைய செயல் கொண்டவர் பச்சோந்தி ஓபிஎஸ் என விமர்சித்தார்

மேலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்தது கருணாநிதி தான் என்றும் ஜெயலலிதா வாஜ்பாய் அரசிற்கு ஆதரவு தரும் பொழுது ஐந்து நிபந்தனைகளில் ஒன்றாக நீர் விவகாரத்தை வைத்ததாகவும் ஆனால் அதை வாஜ்பாய் அரசு நிறைவேற்றாததால் ஆதரவையே திரும்ப பெற்றவர் ஜெயலலிதா எனவும் கூறினார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை போல தமிழக முதல்வர் தைரியாமாக செயல்பட்டருக்க வேண்டும் என்றும் இந்தியா கூட்டணி  கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னரே காவிரி விகாரத்தை பற்றி பேசிவிட்டு சென்றிருக்கலாமே என்றும் துரைமுருகன் இது தொடர்பாக பேசும் போது மழுப்பலாகவும் நழுவலாவும் கோழை போன்று பேசுகிறார் எனவும் சாடினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com