வாடிக்கையாளர்களின் பெரும் ஆதரவுடன் 11 வது ஆண்டு பயணத்தை துவங்கும் ‘ஜுவல் ஒன்’...

வாடிக்கையாளர்களின் பெரும் ஆதரவுடன் 11 வது ஆண்டு பயணத்தை துவங்கும் ‘ஜுவல் ஒன்’...
Published on
Updated on
2 min read

உலகின் முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனமான எமரால்டு ஜுவல்லரியின் ஒரு அங்கமான ‘ஜுவல் ஒன்’ தனது 10 வது ஆண்டை வெற்றிகரமாக கடந்து 11 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.இதனை கொண்டாடும் விதமாக கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஜுவல் ஒன் ஷோரூமில் 11 வது ஆண்டு துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதனையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எமரால்டு ஜுவல்லரி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சீனிவாசன், இயக்குனர் தியான் சீனிவாசன், சி.ஓ.ஓ வைத்தீஸ்வரன் ஆகியோர் கூட்டாக பேசியதாவது: ஆதரவளித்த வாடிக்கையாளர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு, வாடிக்கையாளர்கள் இல்லாமல் எந்த ஒரு நிறுவனமும் இயங்க முடியாது என்றனர்.

தற்போது ஜுவல் ஒன் ஷோரூம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் கிளைகளை தொடங்குவோம். எமரால்டு நிறுவனம் தொடங்கி 39 ஆண்டுகள் ஆகிறது. முன்னணி தங்க நகை உற்பத்தி நிறுவனமாக இருப்பதோடு பிற நாடுகளுக்கும் நகைகளை 32 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து வருகிறோம்.

அயானா, ஜினா, ஜியரா, நிர்ஜஹரா, ஜிலா எனும் நாங்கள் அறிமுகம் செய்த 5 கலெக்ஷன்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இன்னும் பல புதுவித டிசைன்களை அறிமுகம் செய்ய உள்ளோம். கடந்த 11 மாதங்களில் 3 முக்கிய விருதுகளை பெற்றுள்ளோம். ஒரு மாதத்திற்கு 2000 டிசைன்களை எமரால்டு நிறுவனம் உற்பத்தி செய்கிறது. அதில் மிக சிறந்ததை ஜுவல் ஒன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.

மேலும் பம்பாய், டெல்லி, பெங்கால் போன்ற பகுதிகளில் உள்ள டிசைன் கல்லூரிகளில் இருந்து படித்து வெளிவரும் சிறந்த மாணவர்கள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட வடிவமைப்பு கலைஞர்களை கொண்டு புது வித மாடரன் நகைகள் வடிவமைக்கப்படுகிறது. எமரால்டு நிறுவனம் ஒரு மாதத்துக்கு 3000 கிலோ தங்க நகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்த பத்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 23 முதல் டிசம்பர் 18 வரை தங்க நகைகளின் செய்கூலி 20 சதவீதம் தள்ளுபடியும், வைர நகை கேரட்டிற்கு பத்தாயிரம் ரூபாய் தள்ளுபடியும், வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி சேதாரம் இல்லை என தெரிவித்தனர். மேலும், ‘சொர்ண சக்தி’ என்ற நகை சேமிப்பு திட்டத்தில் இணைவோர் 11 மாதத்திற்கு பின்னர் நகைகள் வாங்கும் பொழுது 18 சதவீதம் வரை செய்கூலிகள் தள்ளுபடி வழங்கப்படும் என்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com