ஜின்னாவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம்...வெளியிட்ட முதலமைச்சர்...!

ஜின்னாவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம்...வெளியிட்ட முதலமைச்சர்...!

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான ஜின்னா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப்  புத்தகத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

ஜின்னா வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியீடு:

மாணவர் பருவத்தில் இருந்தே திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு மாணவர் பேரவை தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற ஜின்னா, திமுகவின் அனைத்து போராட்டங்களில் பங்கெடுத்தவர் ஆவார்.

2008 ஆம்  ஆண்டு மாநிலங்கவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு மக்கள் பணியாற்றிய அவரின், வாழ்க்கை பயணம் குறித்த புத்தக வெளியீட்டு விழா ஸ்டாலின் தலைமையில்,  ஜின்னா, அவரது குடும்பத்தினர் பங்கேற்க நடைபெறுவதாக இருந்த நிலையில் உடல்நலக்குறைவால் கடந்த 15 ஆம் தேதி ஜின்னா காலமானார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற விழாவில் அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட திராவிடர் கழக தலைவர் வீரமணி அதனைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ஜின்னா குடும்பத்தினர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com