ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாள்... விரைவில் அரசாணை வெளியிடப்படும்... முதலமைச்சர் அறிவிப்பு...

ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாள்... விரைவில் அரசாணை வெளியிடப்படும்... முதலமைச்சர் அறிவிப்பு...
Published on
Updated on
1 min read

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த சில பகுதிகள் பிரிந்து சென்றன. பின்னர் 2019 முதல் நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்தது. 

இந்தநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் நவம்பர் 1-ம் தேதி எல்லை போராட்டத்தினை நினைவு கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாட பொருத்தமாக இருக்காது என்று கருத்து தெரிவித்தனர்.  இதையடுத்து 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து  சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார் பேரறிஞர் அண்ணா. 

இதனால்  ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதன் அடிப்படையில் தற்போது ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும் 1956- முதல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற தியாகிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.  அதன் தொடர்ச்சியாக 110 எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் நவம்பர் 
1-ம் தேதி 1 லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com