நீதிக்கட்சி தினம் - நெகிழ்வுடன் நினைவுகூர்ந்த முதலமைச்சர்...!

நீதிக்கட்சி தினம் - நெகிழ்வுடன் நினைவுகூர்ந்த முதலமைச்சர்...!
Published on
Updated on
1 min read

நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாளான இன்றைய தினத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்வுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாள்:

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் உருவாகி, நீதிக்கட்சி என அழைக்கப்பட்ட பேரியக்கம் 1916, நவம்பர், 20ஆம் தேதி தோன்றியது. அதன்படி, 2022 நவம்பர் 20 ஆம் தேதியான இன்று நீதிக்கட்சியின் 107 ஆவது ஆண்டு தொடங்குகிறது.

ஸ்டாலின் ட்வீட்:

இந்நிலையில், நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் 107வது ஆண்டு தினத்தை நினைவுகூர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள் எனவும், சாதியின் பெயரால் கல்வி - வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்ற நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட இந்நாளில், பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதியேற்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து - அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம்! ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது! திராவிடா.. விழி! எழு! நட என ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com