அறநிலையத்துறை வசமான காளிகாம்பாள் கோயில்!

சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலை அறநிலையத்துறை கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த பாஜக கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை பாரிமுனை, தம்புசெட்டி தெரு பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோயில் பல ஆண்டுகளாக தனியார் வசம் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோயில் நிர்வாக சீரமைப்புகாக தனியார் வசம் இருந்து அறநிலையத்துறை கட்டுப்பட்டுக்கு கொண்டுவரப்பட்டு அதற்கு புதிய தக்காரையும் அறநிலையத்துறை நியமனம் செய்துள்ளது. 

பல ஆண்டுகளாக விஸ்வகர்மா சனாதன தர்ம என்ற தனியார் அறக்கட்டளை கோயிலை நிர்வகித்து வருகிறது. 3 வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடத்தி அறக்காவலர் குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி தற்போதையை அறக்காவலர் குழுவின் நியமனக் காலம் முடிவடைந்துள்ளது. 

இதற்கிடையே கடந்த ஒன்றாம் தேதி இந்த கோயிலுக்கு அறநிலையத்துறை சார்பில் தக்கார் நியமனம் செய்யப்பட்டு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

அறநிலையத்துறையின்  நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும். தக்கார் நியமனத்திற்கு விளக்கம் கேட்டும் தமிழக பாஜக ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு, பாரத் இந்து முன்னணி அமைப்பினர் கோயிலில் குவிந்தனர். இவர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு ஒரு புறம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில். பாரத் இந்து முன்னனி அமைப்பினர் திடிரென்று கோயிலுக்குள்ளேயே அறநிலையத்துறைக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயற்சி செய்த நிலையில் போலீசாருக்கும். பாரத் இந்து முன்னனி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.  

தொடர்ந்து பாஜகவினரும் கோயிலுக்குள் முழக்கமிட்டதால் பாஜக ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் நாச்சியப்பன், மாநிலச் செயலாளர் வினோத் ராகவேந்திரன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் நாச்சியப்பன் பேசுகையில், தேர்தல் நடத்தி புதிய அறங்காவலர் குழுவைத் தேர்வு செய்ய அக்டோபர் முதல் ஏப்ரல் 24வரை கால அவகாசம் உள்ளது. இதற்கான விதிகளும் உள்ளது. ஆனால் அறநிலையத்துறை கோயிலை கையகப்படுத்தும் முயற்சியில் புதிய தக்காரை நியமித்துள்ளது. இது தொடர்பாக நாங்கள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்கள் கோரிக்கைகளை கருத்தில் எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர். நாங்கள் போராட்டம் செய்ய வரவில்லை. விளக்கம் கேட்கதான் வந்துள்ளோம். ஏற்கனவே வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் தற்போது தக்கார் நியமனம் நடைபெற்றுள்ளது என கூறினார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com