கரும்பு  விளைச்சல் இருந்தும் வெட்ட முடியாமல் விவசாயிகள் வேதனை!

கரும்பு வெட்டும் உத்தரவு நகல் வழங்கப்படாததால் பெரு விவசாயி முதல் சிறு விவசாயி வரை சுமார் பயிரிடப்பட்ட 100 ஏக்கர் கரும்புகள் அனைத்தும் காய்ந்தும் வருகிறது.

கரும்பு  விளைச்சல் இருந்தும் வெட்ட முடியாமல் விவசாயிகள் வேதனை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகன் துக்கையன் விவசாயி ஆன இவர் தனது விவசாய நிலத்தில் கடந்த ஆண்டு நான்கரை ஏக்கர் கரும்பு பயிரிட்டு வெட்டுவதற்கு  மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்துள்ளார்.

தாமதமாக வழங்கப்பட்ட உத்தரவுப் படிவம்

கரும்பு விதைப் பயிர்கள் வாங்குவதற்காக பிரம்ம குண்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் பயிர் கடனும் பெற்றுள்ளார். ஆனால் தற்போது வரை இரண்டு ஆண்டுகளாகியும் கரும்பு வெட்டுவதற்கான உத்தரவு படிவம் ஆலை மூடிய பின்னரே தற்போது கொடுத்துள்ளனர். சர்க்கரை ஆலை மூடிய பின்னர் கரும்பு வெட்டும் உத்தரவு படிவம் கொடுத்தால் எப்படி கரும்பு வெட்டுவது என தெரியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார். 

100 ஏக்கர் பாதிப்பு

மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை இரண்டில் பதிவு செய்யப்பட்ட கரும்புகள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்திற்கு கரும்பு வெட்டும் உத்தரவு நகல் வழங்கப்படாததால் பெரு விவசாயி முதல் சிறு விவசாயி வரை சுமார் பயிரிடப்பட்ட 100 ஏக்கர் கரும்புகள் அனைத்தும் காய்ந்தும் வருகிறது.

ஆலையை உடனடியாக திறந்து இரண்டாம் போகத்தில் பயிர் செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளின் கரும்புகளை ஆலை நிர்வாகம் எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி இல்லை என்றால் நாங்கள் அனைவரும் தற்கொலை செய்ய வேண்டிய வெளியே தவிர வேறு வழியில்லை மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.