கல்வராயன் மலைப் பகுதியில் கன மழை!

கல்வராயன் மலைப் பகுதியில் கன மழை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கல்வராயன் மலைப்பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சங்கராபுரம் மூங்கில்துறை பட்டு கல்வராயன்மலை,சின்னசேலம் கச்சிராயபாளையம், பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் கல்வாயன் மலைப்பகுதியில் உள்ள சிறு மற்றும் பெரிய நீர்வீழ்ச்சிகளில் அதிகளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் தோரடிப்பட்டு மணலாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலத்தில் தண்ணீர் மூழ்கடித்து தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன. இதனால் பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தோரடிப்பட்டு கிராமத்தை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் அத்தியாயசிய பொருட்கள் வாங்க கள்ளக்குறிச்சி சின்னசேலம் கச்சிராயபாளையம் ஆகிய பகுதிகளில் செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் மருத்துவம் மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மிகவும் அப்பகுதி மலைவாழ் மக்கள் இன்னல்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவர்கள் கல்லூரி செல்லும் மாணவர்கள் வீட்டின் உள்ளே முடங்கி கிடைக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் தோரடிப்பட்டு சுற்றி உள்ள 20க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் இந்த தரைப்பாளத்தை உயர் மட்ட மேம்பாலமாக மாற்ற வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.  எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்து கொடுக்க வேண்டுமெனஅப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக மட்டுமே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.