கமலாலயம் முற்றுகை... காங்கிரஸார்கள் கைது!!

கமலாலயம் முற்றுகை... காங்கிரஸார்கள் கைது!!

ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனையை கண்டித்து பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 34 காங்கிரஸார் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கண்டித்தும், அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அந்த வகையில் சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.  இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் காங்கிரஸ்  கட்சியினரை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் அத்துமீறி பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதாக மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர நாத் உள்ளிட்ட 34 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.  அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், கலகத்தை தூண்டும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com