கனிம வளங்கள் ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு ரூபாய் 5 லட்சம் அபராதம்!

கனிம வளங்கள் ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு ரூபாய் 5 லட்சம் அபராதம்!

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனரக லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடன் கருங்கல், ஜல்லி, எம்.சான்ட் போன்ற கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது

உதவி ஆய்வாளர் திலீபன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் நேற்றிரவு தக்கலை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி சென்ற 7-டாரஸ் லாரிகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸார் லாரிகளை தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து தக்கலை போலீசார் ஒரு லாரி 80ஆயிரம் ரூபாய் வீதம் 7 லாரிகளுக்கு 5,60,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.