தேநீர் கடையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது!

தேநீர் கடையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது!
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தேநீர் கடையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து-தேநீர் குடிக்க வந்தவர்கள், வேடிக்கை பார்த்தவர் என 8 பேருக்கு தீ காயம். வடசேரி போலீசார் விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது.அதன் அருகே கடந்த 3 ஆண்டுகளாக டீ கடை நடத்தி வருபவர்கள் ராஜேஷ் மற்றும் சபீக். இவர்களது தேநீர் கடை இரவு முழுவதும் செயல்படும். இந்நிலையில் இன்று விடியற்காலையில் கடையில் தேநீர் வியாபாரம் நடந்து கொண்டு இருந்து மேலும் கேஸ் அடுப்பில் இருந்து வடை போட்டு முடித்து அந்த வெப்பத்தோடு கோஸ் குத்தி மீது வைத்ததாக கூறப்படுகிறது, இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. சுதாகரித்து கொண்ட தேநீர் தயாரிப்பாளர் உட்பட கடையில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியுள்ளர். இந்நிலையில் பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துள்ளது. இதில் தேநீர் குடிக்க வந்தவர்களில் 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

இதில் வேடிக்கை பார்க்க வந்தவர் ஒருவருக்கும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் இச்சம்பவம் குறித்து வடசேரி காவல் நிலையத்திற்கும், நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.உடனே சம்பவ இடத்தில் வந்த தீயணைப்பு துறையினர் டீக்கடையில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர். மேலும் தீக்காயமடைந்த 8 பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிட்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 20 நிமிடங்களுக்கு மேலாக சிலிண்டரில் தீ பற்றி எரிந்துள்ளது. அதனை அணைக்காமல் தேநீர் கடை இயங்கி வந்த நிலையில் அதிக வெப்பம் காரணமாக சிலண்டர் வெடித்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com