கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி "டாக்டர் கலைஞர்" அரசு கலைக்கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியை "கலைஞர் கருணாநிதி" அரசு மகளிர் கலைக் கல்லூரி என பெயர் மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.