தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கருப்பாநதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
தென்காசி கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி கருப்பாநதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக அணைக்கு தற்போது ஆயிரத்து 400 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக, அணையின் பாதுகாப்பு கருதி சுமார் ஆயிரத்து 300 கன அடி நீர் வெளியேற்றம் செய்து வரும் நிலையில், கல்லாறு மற்றும் பெரியாறு பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 ஆற்றுப்படுகையிலும் யாரும் இறங்க வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது