அமைச்சர் சக்கரபாணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,...
மத்திய அரசு வழங்கிய மண்ணெண்ணை ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது என்றும், இதுக்குறித்து முதலமைச்சர் பொறுப்பேற்ற பின், மத்திய அரசின் பெட்ரோலிய துறை அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டும் முறையான பதில் இல்லை எனக்கு குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் 30 லட்சம் பேர் எரிவாயு இணைப்பு இல்லாமல் உள்ளதாகவும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மண்ணெண்ணை வைத்தே வாழ்க்கை நடத்துகின்றனர் என்றும், மத்திய அரசு ஒதுக்கீடு அளவை குறைத்திருப்பது வேதனையளிக்கிறது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, மத்திய அரசு அனுமதி வழங்கினால் தான் மண்ணெண்ணை வழங்க முடியும் எனவும், கோதுமை ஒதுக்கீடு அளவும் மத்திய அரசின் சார்பில் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 15 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து, அவர், தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது எனவும், பொதுமக்கள் இதனால் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாகவும் கூறினார். அதோடு, திமுக அரசு பொறுப்பேற்ற பின் மக்களுக்கு தரமான அரிசி வழங்கி வருவதாகவும், இதுவரை இந்தாண்டு 35 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரின் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெறிவித்தார்.
மேலும், மண்ணெண்ணெய் அளவு, கோதுமை அளவு குறைத்ததால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என முதலமைச்சரின் அனுமதி பெற்று, மத்திய அமைச்சரை நேரடியாக சந்தித்து வலியுறுத்துவோம்
எதிர்கட்சியினர் நேற்று டெல்லியில் இதுக்குறித்து வலியுறுத்தியிருக்கலாம், ஆனால் எதற்கு சென்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் விமர்சித்தார்.
மேலும், பரிசோதனை அடிப்படையில் கோதுமையை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது..ஆனால் அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும், GST இல்லை என மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அரிசி, பருப்பு என அனைத்தையும் பாக்கெட் மூலம் விநியோகம் செய்யும் திட்டம் தமிழ்நாடு அரசிடம் உள்ளது எனவும் கூறினார்.