கொட நாடு கொலை வழக்கு விசாரணைக்கு தடைகோரிய வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை...

கொடநாடு கொலை வழக்கில் மேல், விசாரணைக்கு தடைகோரிய வழக்கு செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

கொட நாடு கொலை வழக்கு விசாரணைக்கு தடைகோரிய வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்கு தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கோத்தகிரி போலீசார் நீதிமன்ற அனுமதி பெற்று குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை கோரி, இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள அனுபவ் ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.