கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்க்கு வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள்!

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்க்கு வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.பறவைகளின் நூழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான்,  ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க இங்கு 247வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

தற்போது சரணாலயத்திற்கு செங்கால் நாரை கூழைகிடா, பூநாரை, கடல் காகம், கடல் ஆலா மற்றும் உள்ளான் வகைகள், வரி தலைவாத்து உள்ளிட்ட பறவைகள் லட்சகணக்கில் வந்துள்ளது. பறவைகள் சரணாலயத்தில் தற்போது அடிக்கடி மழை பெய்வதாலும், பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதால் இந்த ஆண்டு தற்போது கூட்டம், கூட்டமாக பறவைகள் வந்து அமர்ந்துள்ளதையும், பறவைகள் சிறகு அடித்து பறப்பதையும்  பார்ப்பதற்கு ரம்மியமாக அமைந்துள்ளது. இந்த பறவைகளை சரணாலயத்தில்இரட்டைதீவு, கோவை தீவு ,நெடுந்தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில்  காலை  மாலைவேளைகளில்  கண்டுகளிக்கலாம்.