அதிமுகவும் திமுகவும் அடித்துக் கொண்டிருந்தால் தான் நமக்குள் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சியாக இருக்க முடியும் என்று அ.தி.மு.க உறுப்பினர் கே.பி. முனுசாமி சூசகமாக பேசியது அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் என அறிவித்துவிட்டு, தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு தான் என்று அறிவித்துள்ளீர்களே இதனால் பெண்கள் தி.முக. அரசை நம்புவார்களாக என்றும், 100 நாள் வேலை திட்டம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம்
குறித்து பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது விவாதத்தை முடிக்கும் படி சபாநாயகர் கூறிய நிலையில், ஆவேசமடைந்த கே.பி. முனுசாமி, உணர்ச்சி பூர்வமாக பேசிக் கொண்டிருப்பதாகவும், அதிமுகவும் திமுகவும் அடித்துக் கொண்டிருந்தால் தான் நமக்குள் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சியாக இருக்க முடியும் என்று சூசகமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.