பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, கட்சிக்கு உண்மையாக உழைத்த மூத்த உறுப்பினர்கள் பலரும் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவரிசையில் அண்மையில் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த முருகனுக்கு, மத்திய இணை அமைச்சருக்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழக பாஜகவின் மூத்த தலைவராக இருக்கும் இல. கணேசனுக்கும் ஆளுநர் பொறுப்பு வழங்கப்படலாம் என பேசப்பட்டது. அதன்படி, சிக்கிம் ஆளுநர் சிக்கிம் ஆளுநர் கங்காதர பிரசாத், கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பு தற்போது இல. கணேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இல. கணேசன் மாநிலங்களவை முன்னாள் எம்பியாக இருந்தது மட்டுமல்லாமல், பாஜக தேசிய குழு உறுப்பினராகவும் இருந்தவர். இதற்கு முன் பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த அவர், ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர் என கூறப்படுகிறது. தற்போது மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று, இல. கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். புதிய பதவி உயர்வால் மகிழ்ச்சியில் திழைத்துள்ள இல. கணசேன், வடகிழக்கு மக்களோடு பணியாற்ற வாய்ப்பு தந்தமைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.