தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் மது கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து நேற்று சில மாவட்டங்களை தவிர அனைத்து இடங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
அரசு அறிவிப்பின்படி தேனி மாவட்டத்தில் காவல் துறையினரின் பாதுகாப்புடன் 93 டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டு மது பிரியர்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டது.தேனி மாவட்டத்தில் பண்டிகை கால விற்பனையை முறியடித்து 3.95 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை 10 மணிக்கு திறக்கப்பட்ட மதுபான கடைகளில் அதி காலை 9 மணியில் இருந்து மது பிரியர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடித்து சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து மதுபானங்களை பெற்றுச் சென்றனர்.
டாஸ்மாக் மதுபான கடை மாலை 5 மணி அளவில் முடிவடையும் நிலையில் மதுப் பிரியர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டும் வகையில் கடைசி பத்து நிமிடங்களில் காட்டுத்தனமாக ஓடி வந்து மதுபானங்களை பெற்றுச் சென்று உற்சாகமடைந்தனர்.
சில மது பிரியர்கள் நெடுதூரம் ஓடி வந்து கடை அடைத்ததற்கு பிறகு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடையைத் திறக்கச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டு திரும்பிச் சென்றனர். இதனால் கடை அடைக்கப்படும் கடைசி ஐந்து நிமிடம் டாஸ்மாக் மதுபானக்கடை சுவாரசியமாக காணப்பட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள 93 கடைகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3.95 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி பண்டிகை கால விற்பனை சாதனையை முறியடித்தது. இன்னும் சிறிது நேரம் ஓடி வந்து ஏமாற்றத்துடன் சென்ற மது பிரியர்களுக்கும் மதுவை விற்பனை செய்திருந்தால் தேனி மாவட்டத்தின் மது விற்பனை 4 கோடியை தொட்டு இருக்கும். அடைத்து விட்டார்களே.!