100 நாள் ஆட்சியை கண்டு திமுக-வில் இணையும் முக்கிய பிரபலங்கள்  

100 நாள் ஆட்சியை கண்டு திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
100 நாள் ஆட்சியை கண்டு திமுக-வில் இணையும் முக்கிய பிரபலங்கள்   
Published on
Updated on
1 min read

100 நாள் ஆட்சியை கண்டு திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இன்று அமைச்சர் பொன்முடி தலைமையில், மாற்றுக்கட்சியிலிருந்து 1000 பேர் திமுகவில் இணைந்தணர். சந்தைப்பேட்டையில் உள்ள தனியார் திருமணமண்டபம் ஒன்றில், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரம் பேர் அதிமுக, அமமுக,  பாமக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில்; திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், உயர்கல்வித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான பொன்முடி தலைமையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

பின்னர் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: திராவிட முன்னேற்ற கழக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்த நிலையில், ஆட்சியின் மீது ஏற்பட்ட நம்பிக்கையின் விளைவாக மாற்றுக் கட்சியை சேர்ந்த ஆயிரம் நபர்கள் திமுகவில் இணைந்து உள்ளனர் என்றும், எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாகவும் செயல்பட்டு 100 சதவீத வெற்றியை பெறவேண்டும் என பேசினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com