”அரசு குறித்து குறை சொல்வதை விடுத்து மக்களை காப்பாற்றுவோம்” - கமல்ஹாசன்

அரசு குறித்து குறை சொல்வதை விடுத்து பாதிக்கப்பட்ட மக்களை காப்பற்ற என்ன வழியோ அதை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்  தெரிவித்தார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன்,  இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் நேரங்களில் அரசை குறை சொல்லி எந்த பலனும் இல்லை என்று கூறினார்.

ஒரு கோடி மக்களையும்  ஒரே நேரத்தில் அரசால் காப்பாற்ற முடியாது, எனவே அரசை குறைசொல்வதை விடுத்து முதலில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டும் என கமல் கேட்டு கொண்டார். 

தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான  வேளச்சேரியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் நிலைமை சீராகும் வரை அடுமனைகள் அமைக்கப்பட்டு தினமும் 5 ஆயிரம் பேருக்கு உணவு விநியோகம் செய்யபட உள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com