ஐ வில் கிஸ் யூ’... பாலுணர்வை தூண்டும் வகையில் சிவசங்கர் பாபா கடிதம்

ஐ வில் கிஸ் யூ, வெல்கம் என்றதையும் தாண்டி, பள்ளி மாணவிகளுக்கு பாலுணர்வை தூண்டும் வகையில் சிவசங்கர் பாபா கைப்பட எழுதிய கடிதங்களை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
ஐ வில் கிஸ் யூ’...  பாலுணர்வை தூண்டும் வகையில் சிவசங்கர் பாபா  கடிதம்
Published on
Updated on
1 min read

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி தனியார் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, அந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார்.

அவர் மீது 4 போக்சோ உள்ளிட்ட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த புதன் கிழமையன்று சுசில்ஹரி பள்ளியில் 2-ம் கட்ட சோதனையை நடத்திய போலீசார், பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பாபாவின் தனிப்பட்ட அறையில் இருந்து முக்கிய ஆவணங்கள், பெண் டிரைவ், ஹர்டுடிஸ்க் ஆகியவற்றை கைப்பற்றினர்.

மேலும், ஐ வில் கிஸ் யூ, வெல்கம் என்றதையும் தாண்டி, பள்ளி மாணவிகளுக்கு பாலுணர்வை தூண்டும் வகையில் சிவசங்கர் பாபா கைப்பட எழுதிய கடிதங்களையும் கைப்பற்றியுள்ளனர். மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் தங்களுக்கு வாழ்த்து வேண்டும் என கூறி கடிதம் எழுதும் மாணவிகளுக்கு, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும், ஐ வில் கிஸ் யூ எனவும், சிவசங்கர் பாபா பதில் கடிதம் எழுதுவாராம்.

இவ்வாறு பள்ளி மாணவிகளுக்கு பாலுணர்வை தூண்டும் வகையில் சிவசங்கர் பாபா கைப்பட எழுதிய கடிதங்கள், இந்த வழக்குகளுக்கு கூடுதல் வலுசேர்க்கும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com