பிடிவாரண்ட் நபர்களை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்துமாறு டிஜிபிக்கு வக்கில் கடிதம்

பிடிவாரண்ட் நபர்களை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்துமாறு  டிஜிபிக்கு வக்கில் கடிதம்
Published on
Updated on
1 min read

நீதிமன்றங்களால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களை  உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கம்படி தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார்

தமிழக்த்தில் உள்ள உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் விசாரிக்கும் குற்றவியல் வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்ட நபர் தொடர்ந்து ஆஜராகவில்லை என்றால், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் பிறப்பிக்கின்றன. அதன்படி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து ஆஜர்படுத்தி, வாராண்ட் உத்தரவை நிறைவேற்றுவதில் காவல்துறையின் முறையாக செயல்படவில்லை என்றும், மெத்தனப்போக்குடன் உள்ளதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் 

மேலும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் எத்தனை நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கும், அனைத்து மாவட்ட அமர்வு நீதிமன்றங்களின் நீதிபதிகள், கூடுதல், உதவி மற்றும் சிறப்பு அமர்வு நீதிமன்றங்களின் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா எழுதியுள்ள கடிதத்தில், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு பிரிவு 7 உட்பிரிவு 2 ன் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டை என்பது அதை செயல்படுத்தப்படும் வரை அல்லது அதை பிறப்பித்த நீதிமன்றம் திரும்பப்பெறும் வரை நடைமுறையில் இருக்கும் என்பதை சுட்டிகாட்டியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 6ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி,  மேற்கு மண்டல ஐ.ஜி. மட்டும் அவர் எல்லைக்குட்பட்ட காவல் கண்காணிப்பாளர்களிடமிருந்து அறிக்கை பெறுறு விவரங்களையும் பெற்று, சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஒப்பிட்டு பார்த்து விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் நிலுவையில் உள்ள வாரண்டுகள் குறித்த விரிவான அறிக்கையை வழங்கும்படி என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிப்பாக வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வாரண்ட் உத்தரவுகளை  நிறைவேற்றும்படி அனைத்து காவல்துறை ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு எழுதியுள்ள கடிதத்தில் அசன் முகமது ஜின்னா வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com