”திமுகவினர் கூறிய பொய்” - உடைத்து பேசும் இபிஎஸ்

”திமுகவினர் கூறிய பொய்” - உடைத்து பேசும் இபிஎஸ்

சென்னைக்கு தண்ணீர் காட்டும் மழை

வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் சென்னையில் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது .

சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,கடலூர்,செங்கல்பட்டு மற்றும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

களத்தில் இறங்கிய இபிஎஸ்: 

இந்நிலையில் சென்னை ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட முகலிவாக்கம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி வேட்டியை மடித்து கொண்டு மழை  நீரில் இறங்கி ஆய்வு செய்துள்ளார். அங்கே உள்ள மக்களிடம் மின்சாரம், உணவு, மருத்துவ வசதி  போன்ற அத்தியாவசிய உதவிகள் ஏதேனும் வேண்டுமா? என கேட்டறிந்தார்.

திமுகவினர் கூறிய பொய்”:

இதனையடுத்து, சென்னை மதனந்தபுரத்தில் பேட்டி அளித்த போது;
சென்னையில் மழை நீர் எங்கும் தேங்கவில்லை என திமுகவினர் பொய் கூறுகின்றனர். மக்களுக்கு எவ்வித வசதியும் செய்து தரப்படவில்லை, வடிகால் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலை  தொடர்ந்தால் சென்னை மிகவும் மோசமான நிலைமைக்குள்ளாகும் என திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறினார்.  

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com